ஆசியக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழைக் காரணமாக முடிவில்லாமல் போனது.
இதையடுத்து இந்திய அணி நேற்று நேபாளத்தோடு மோதியது. முதலில் இந்தபோட்டியில் பேட் செய்த நேபாளம் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி பேட் செய்த போது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இலக்கு 145 ரன்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பெறவைத்தனர். 74 ரன்கள் சேர்த்த கேப்டன் ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.