பரபரப்பாக நடந்து 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை கைப்பற்றியது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக இருந்தன.
இந்நிலையில் தற்போது பரபரப்பாக நடந்து வந்த 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் வெற்றி இலக்கு 328 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். இந்நிலையில் நேற்று மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தொடர்ந்த ஆட்டத்தில் ஆரம்பம் மெதுவாக சென்றாலும் அதிரடியாக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் ரன்களை கடகடவென குவிக்க தொடங்கினர். இடையில் வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனாலும் நிதானமாக விளையாடிய ரிஷப் பண்ட் நாட் அவுட் ஆகாமல் 89 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒருநாள் தொடர் போல விருவிருப்பாக சென்ற இந்த தொடரில் இந்தியா வெற்றியை கைப்பற்றியுள்ளது.