Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி.. பெங்களூருவில் இன்று தொடக்கம்!

Advertiesment
நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி.. பெங்களூருவில் இன்று தொடக்கம்!

vinoth

, புதன், 16 அக்டோபர் 2024 (07:40 IST)
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அணியில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் கோலி, ரோஹித் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரிடம் இருந்து ரசிகர்கள் நல்ல இன்னிங்ஸை எதிர்பார்க்கின்றனர்.

அது இன்றைய போட்டியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷுப்மன் கில் சில உடல் நலப் பிரச்சனைகளால் அவதிப்படுவதாக தெரிகிறது. அதனால் அவருக்கு பதில் சர்பராஸ் கான் அணியில் வரலாம் எனத் தெரிகிறது.

இந்திய அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்பராஸ் கான்,  கே எல் ராகுல், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல்,  குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா (துணைக் கேப்டன்).

நியுசிலாந்து அணி
டாம் லேதம், டாம் பிளெண்டெல், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கான்வே, மேட் ஹென்ரி, டேரல் மிட்சல், வில் ஓ'ரோர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி, டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரச குடும்பத்துக்கு வாரிசான அஜய் ஜடேஜா… சொத்தாக கிடைத்தது இத்தனை கோடியா?