Publish Date: Wed, 09 Oct 2024 (12:34 IST)
Updated Date: Wed, 09 Oct 2024 (12:35 IST)
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் நிறைவு செய்தது இந்திய அணி. இதையடுத்து தற்போது வங்கதேச அணிக்கெதிரான டி 20 தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடர் முடிந்ததும் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியுசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு தொடைப் பகுதியில் groin injury ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார்.
நியுசிலாந்து அணி
டாம் லேதம், டாம் பிளெண்டெல், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கான்வே, மேட் ஹென்ரி, டேரல் மிட்சல், வில் ஓ'ரோர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி, டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங்.
vinoth
Publish Date: Wed, 09 Oct 2024 (12:34 IST)
Updated Date: Wed, 09 Oct 2024 (12:35 IST)