IND vs AUS Test Series: தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி மோசமான ரெக்கார்டையும் செய்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் பயங்கரமாக சொதப்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 25 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே பெற்று 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி.
இந்த போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆன நிலையில், தேவ்தத் படிக்கல் 23 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆனார். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக டக்-அவுட் ஆன அணிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது இந்தியா.
இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி வீரர்கள் 33 முறை டக் அவுட் ஆகியுள்ளனர். பும்ரா 5 முறையும், கில், சர்ப்ராஸ் கான், சிராஜ் தலா 3 முறையும் அதிகபட்ச டக் அவுட் ஆகியுள்ளனர். இந்த பட்டியலில் 25 டக் அவுட்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 19 டக் அவுட்களுடன் வங்கதேசம் 19வது இடத்திலும் உள்ளது.