Publish Date: Fri, 23 Jul 2021 (17:07 IST)
Updated Date: Fri, 23 Jul 2021 (17:09 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய் அணி ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான் 13 ரன்களிலும் பிருத்வி ஷா 49 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் 46 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் தற்போது மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவில் இந்தியா 147 ரன்கள் சேர்த்துள்ளது.
mahendran
Publish Date: Fri, 23 Jul 2021 (17:07 IST)
Updated Date: Fri, 23 Jul 2021 (17:09 IST)