வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (17:16 IST)
இந்தியா  மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியையும் இழந்த நிலையில் இந்த தோல்வியால் வொயிட்வாஷ் ஆகியுள்ளது இந்தியா. இதனால் பயிற்சியாளர் கம்பீர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அவர் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்து ஓய்வுபெறவைத்துவிட்டு பரிசோதனை என்ற பெயரில் அணியில் வீரர்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அது இந்திய அணிக்குக் கைகொடுக்கவில்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த தொடரை இழந்ததின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையில் ஐந்தாவது இடத்துக்கு சரிந்துள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான பந்தயத்தில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

மொத்தமா முடிச்சு விட்டாங்க… கவுகாத்தி டெஸ்ட்டில் தோற்று வொயிட்வாஷ் ஆன இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments