நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 185 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் படு சொதப்பலான இன்னிங்ஸை ஆடி 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து 162 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸி அணி 4 விக்கெட்கள் மட்டும் இழந்து இலக்கை எட்டி தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இரு அணி வீரர்களும் தங்கள் ஜெர்ஸியில் பெயர்கள் மற்றும் எண்கள் ஆகியவற்றை பிங்க் நிறத்தில் அணிந்து விளையாடினர். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் க்ளன் மெக்ராத்தின் மனைவி மார்பக புற்றுநோயால் இறந்ததை அடுத்து அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக சிட்னியில் டெஸ்ட் நடக்கும் போது ஞாயிற்றுக் கிழமைகளில் இரு அணி வீரர்களும் இதுபோல பிங்க் நிற ஜெர்ஸி அணிந்து விளையாடுவது வழக்கமாக உள்ளது.