Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IND vs AUS 2nd Test: 19 ரன்லாம் ஒரு டார்கெட்டா..? தொடங்கியதும் முடிந்த போட்டி! - ஆஸ்திரேலியா அபார வெற்றி!

India Australia Test

Prasanth Karthick

, ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (11:36 IST)

IND vs AUS 2nd Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் பெர்த் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா இல்லாததால் பும்ரா தலைமையில் அணி விளையாடினாலும் வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கியது. முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 180 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை அடித்து குவித்தது.

 

இந்நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் இறங்கிய இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் நேற்றைய போட்டி முடிந்தது. இன்று தொடங்கிய மூன்றாவது நாள் போட்டியில் நிதிஷ் குமார் பொறுமையாக விளையாடி 42 ரன்கள் வரை சேர்த்து விக்கெட் இழந்தார். இறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு வெறும் 19 ரன்கள்தான் என்று ஆனது.

 

அதை தொடர்ந்து களத்தில் இறங்கிய நாதன் மெக்ஸ்வீனி மற்றும் உஸ்மான் கஜ்வா இருவரும் 3.2 ஓவர்களிலேயே 19 ரன்களை அடித்து போட்டியில் வெற்றி பெற்றனர். இதனால் தற்போது இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன. 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியின் விளிம்பில் இந்திய அணி.. பேட்ஸ்மேன்கள் சொதப்பல்..!