Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசி ஓவரில் ‘தல’ தோனியின் ருத்ர தாண்டவம்! அதிரடி காட்டிய சிஎஸ்கே! – டார்கெட் இதுதான்!

Advertiesment
Thala Dhoni

Prasanth Karthick

, ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (21:34 IST)
இன்று நடைபெற்று வரும் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 207 ரன்களை டார்கெட்டாக செட் செய்துள்ளது.



மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸை பொறுத்தவரையில் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணிதான் வெற்றியையும் பெறும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பவுலிங் எடுத்தது.

சிஎஸ்கே பேட்டிங் இறங்கிய நிலையில் ரஹானேவுக்கு வான்கடே பழக்கமான மைதானம் என்பதால் அவரை ஓபனிங் இறக்கியது. ஆனால் அவர் 5 ரன்களுக்கே அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திராவும் 21 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் ருதுராஜ் (69) – ஷிவம் துபே (66) கூட்டணி நின்று விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்களை விளாசி ரன்களை குவித்தது. இடையே வந்த டேரில் மிட்செல் மட்டும் 14 பந்துகளுக்கு 17 ரன்கள் என டெஸ்ட் மேட்ச் விளையாடினார்.

கடைசி ஓவரில் 4 பந்துகள் மிச்சமிருக்க மிட்செலோ அவுட் ஆக, அந்த நேரம் எண்ட்ரி கொடுத்தார் தோனி. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் 4 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். மொத்தமாக 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்துள்ள சிஎஸ்கே மும்பை அணிக்கு 207 ரன்களை டார்கெட் செய்துள்ளது.

இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடிக்க கூடிய ஸ்கோர்தான் என்பதால் சிஎஸ்கேவின் ஃபீல்டிங்கை பொறுத்தே வெற்றியும் அமையும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற மும்பை பவுலிங்.. சூர்யகுமார் யாதவ் மிஸ்ஸிங்..? – ப்ளேயிங் 11ல் யார் யார்?