Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்கனவே அடிக்க ஆள் இல்ல.. முக்கிய வீரர் காயத்தால் விலகல்! – சங்கடமான நிலையில் டெல்லி அணி!

Mitchell Marsh

Prasanth Karthick

, ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (15:07 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் டெல்லி அணியிலிருந்து முக்கிய வீரரான மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார்.



நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்காக போராடி வரும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் இறுதியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஆனால் டெல்லி அணியில் வார்னர் மற்றும் சிலரை தவிர சொல்லிக் கொள்ளும்படி அடித்து ஆடக் கூடிய நம்பகமான வீரர்கள் நிறைய இல்லை. இந்த சீசனில் டெல்லி அணி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் ஆரம்ப போட்டிகளில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று வந்தார். ஆனாலும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். இந்நிலையில் போட்டியில் காயமடைந்தார்.


இதனால் கடந்த 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகததால் அவர் தொடரை விட்டு வெளியேறி தாயகம் திரும்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ஷ் இல்லாமலே கூட கடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றது. மேலும் டெல்லி அணியின் போட்டிகளில் பெரும்பான்மையாக வெற்றிக்கு காரணமாக மிட்சலின் ஆட்டம் இருக்கவில்லை என்பதால் இது டெல்லியை பாதிக்காது என்று கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த சீசனில் சிஎஸ்கே கேப்டனாக ரோஹித் சர்மா? – மைக்கெல் வாகன் விருப்பம்!