இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இங்கிலாந்து வீரர் க்ராலியிடம் சுப்மன் கில் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் ஒரு சதம் விளாசியிருந்தார். இந்த இன்னிங்ஸில் பும்ரா மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் இறங்க அதிரடியாய் பந்து வீசிய இங்கிலாந்து அணி இந்தியாவையும் அதே 387 ரன்களில் ஆல் அவுட் செய்தது.
இந்நிலையில் இரண்டாவது இன்னின்ஸ் தொடங்கியபோது பும்ரா வீசிய பந்தில் தனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து வீரர் க்ராலி மருத்துவ குழுவை வரச் செய்தார். அப்படி இப்படியென்று அவர் நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பது. போட்டியை அடுத்த நாளில் தொடங்குவதற்காகதான் என கடுப்பான இந்திய வீரர் சுப்மன் கில், க்ராலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விளையாட முடியவில்லை என்றால் ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறு என்பது போல சுப்மன் கில் சைகை காட்ட, இருவருக்கும் பற்றிக் கொண்டது. அங்கு வந்த நடுவர்கள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K