சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இனி மாதம்தோறும் விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது.
இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும் முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விருதுக்காக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட், அஸ்வின், நடராஜன் மற்றும் சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.