Publish Date: Tue, 09 Jan 2024 (09:16 IST)
Updated Date: Tue, 09 Jan 2024 (09:28 IST)
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன். இவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டோடு அதிரடியாக விளையாடி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 32.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் “நான் எடுத்துள்ள முடிவு சரியானதுதானா என பல இரவுகள் தூங்காமல் யோசித்தேன். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்தான். ஒரு சிறந்த பயணத்தில் நாட்டைப் பிரதிநிதித் துவப் படுத்தியதில் மகிழ்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட தொப்பிகளிலேயே டெஸ்ட் தொப்பிதான் மிகவும் விலை மதிப்பற்றது. ஆனால் நான் இப்போது என் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலை நோக்கிக் காத்திருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவது வாடிக்கையாகி வருகிறது.