Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி… ஓய்வு குறித்து டீன் எல்கர் கருத்து!

Advertiesment
இனி பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என்பதில் மகிழ்ச்சி… ஓய்வு குறித்து டீன் எல்கர் கருத்து!

vinoth

, வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:37 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரோடு தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு பற்றியும் நடந்து முடிந்த தொடர் பற்றியும் பேசிய அவர் “இந்த தொடர் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகின் தலைசிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார்.  அவர் போன்ற ஒரு வீரரை எதிர்கொள்ளும்  போது நாம் நம்மையே சோதித்துக் கொண்டு நமது எல்லையை தாண்ட முயல வேண்டும்.

இனிமேல் என் வாழ்க்கையில் நான் பும்ராவை எதிர்கொள்ள வேண்டாம் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பும்ரா அறிமுகமாகும் போது அந்த தொடரில் நானும் இருந்தேன் என நினைக்கிறேன். இருவரும் வெகுதூரம் கடந்துவிட்டோம். 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனேன்.  அன்று முதல் இன்றுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட நான் காயம் காரணமாக தவறவிடவில்லை என்பது சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டெஸ்ட் வரலாற்றில் சாதனைப் படைத்த கேப்டவுன் டெஸ்ட்!