Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரால் நிமிந்து நிற்கக்கூட முடியவில்லை....அஸ்வின் மனைவி டுவீட்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (21:34 IST)
காலையில் எழுந்து நிற்க எழும்போது அவரால் நிமிர முடியவில்லை எனக் கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி டுவீட் பதிவிட்டுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து முடிந்துள்ளது. பரபரப்பான ஆட்டத்தில் நின்று விளையாடிய அஸ்வின் – விஹாரி கூட்டணி விக்கெட் இழக்காமல் தொடர்ந்து ஆட்டத்தை இழுத்து சென்று ட்ரா ஆக்கினர். முன்னதாக விளையாடிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய போதிலும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவர் அவுட் ஆகவில்லை என்றால் இந்தியா வென்றிருக்கும் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

டெஸ்ட் போட்டியென்றாலும் இன்றைய  போட்டி ஒருநாள் போட்டிபோல் விறுவிறுப்பாக இருந்தது.

இந்நிலையில், அஸ்வின் மனைவி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்றைய இரவு மிகுந்த வலியுடந்தான் பெட்டிற்கு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து நிற்க எழும்போது அவரால் நிமிர முடியவில்லை. குனிந்து அவரால் ஷூ லேஷ் கட்டமுடியவில்லை. ஆனால் இன்று அவர் விளையாடியதைப் பார்க்கவே ஆச்சர்யமாக இருந்தது  எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இந்திய அணி டிரா பண்ணியதற்கு அஸ்ச்வின் விஹாராவுக்கு பெரும் பங்குண்டு என்பதால் பலரும் இருவரைப் பாரட்டிவருகின்றனர். கனிமொழி எம்பி அவரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments