Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மன்கட் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா… ஹர்ஷல் படேலை வச்சு செய்யும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:40 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராட் கோலி (61), பாப் டு ப்ளஸி (79), மேக்ஸ்வெல் (59) என ரன்களை குவித்தனர்.

ஆனால் அடுத்து லக்னோ அணி களமிறங்கியபோது மோசமான பவுலிங்கால் ரன்களை அதிகம் விட்டது ஆர்சிபி. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் எகிற 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி பந்தை ஹர்ஷல் படேல் வீச வந்த போது எதிர்முனையில் நின்ற ரவி பிஷ்னாய் கிரீஸை விட்டு வெளியேறினார். அப்போது ஹர்ஷல் படேல் மன்கட் முறையில் அவுட் ஆக்க ஸ்டம்பை தட்டினார். ஆனால் அவர் கையில் ஸ்டம்ப்பில் படவில்லை. அதை மட்டும் அவர் சரியாக செய்திருந்தால், போட்டி டிராவில் முடிந்திருக்கும். அதன் பின்னர் சூப்பர் ஓவர் மூலமாக முடிவு தெரிந்திருக்கும். அவர் செய்த தவறால் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments