இன்றைய ஐபிஎல் லீக் சுற்றுகளின் முதல் போட்டியில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதும் நிலையில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.
ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறும் நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் குஜராத் டைட்டன் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த சீசனின் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த போட்டியில் மட்டும் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பந்துவீச்சாளர் ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டு அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குஜராத் அணி இதுவரை போட்டியிட்ட 2 போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில் இந்த போட்டியிலும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.