ஐபிஎல் போட்டிகளின்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்த வீடியோவை லலித் மோடி திடீரென வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங்கும், ஸ்ரீசாந்தும் 2008ல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோது விளையாடி வந்தனர். ஹர்பஜன் சிங் மும்பை அணிக்காகவும், ஸ்ரீசாந்த் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடிய நிலையில், இரு அணிகளும் மோதிக் கொண்ட போட்டியின் முடிவில் இரு தரப்பு வீரர்களும் கைக்குலுக்கிக் கொண்டபோது ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று வரை தொடர்ந்து வரும் அந்த சர்ச்சையில், நான் ஸ்ரீசாந்தை அடித்திருக்கக் கூடாது என ஹர்பஜன் சிங் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2008ல் ஐபிஎல் போட்டியை தொடங்கிய லலித் மோடி தற்போது யாருமே பார்க்காத ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைவது தெளிவாக பதிவாகியுள்ளது.
இதுபோன்ற பல வீடியோக்களும் லலித் மோடியிடம் இருக்கலாம் என கூறப்படுகிறது. லலித் மோடி இந்த வீடியோவை இப்போது பகிர்ந்திருப்பது மிகவும் கேவலமான ஒரு செயல் என ஸ்ரீசாந்த் மனைவி இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Edit by Prasanth.K