தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

Mahendran
சனி, 30 ஆகஸ்ட் 2025 (09:51 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக்கின் மகன், ஆர்யவிர் சேவாக், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தனது அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த ஆர்யவிர், 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
 
சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய 17 வயதான ஆர்யவிர், நவ்தீப் சைனி வீசிய முதல் இரண்டு பந்துகளையே பவுண்டரிகளாக விளாசி தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இருப்பினும், 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்யவிர் பேட்டிங்கின்போது, சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணி 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் அணி, 93 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
சமீபத்தில், கூச் பெஹர் டிராபி தொடரில் 309 பந்துகளில் 297 ரன்கள் குவித்து ஆர்யவிர் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருந்தார். தற்போது, டெல்லி பிரீமியர் லீக்கில் அவரது சிறப்பான அறிமுகம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் அவரும் ஒருவர் என்பதை உணர்த்துகிறது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

அடுத்த கட்டுரையில்
Show comments