Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர்தான் பெஸ்ட்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர்தான் பெஸ்ட்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:24 IST)
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அஸ்வினுக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நீண்ட இடைவெளி விழுந்துவிட்டதால், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “உலகக் கோப்பை தொடரில் அக்ஸர் படேல் இடம்பெறாவிட்டால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்தான் சரியான நபர். அதனால்தான் ஆசியக் கோப்பை தொடரில் அக்ஸருக்கு பதில் சுந்தரை அழைத்து ப்ளேயிங் லெவனிலும் ஆடவைத்தனர். அதனால் உலகக் கோப்பையில் அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர்தான் சிறந்த தேர்வாக இருப்பார்” என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஆஸ்திரேலியா தொடரில் பிசிசிஐ தவறு செய்துவிட்டது…”- சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் காரணம்!