Publish Date: Mon, 18 Sep 2023 (11:17 IST)
Updated Date: Mon, 18 Sep 2023 (11:20 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் சமீபத்தில் உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்த முறை உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெறவில்லை. கடைசியாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் இல்லாமல் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் அக்ஸர் படேல். அவர் உலகக் கோப்பைக்குள் குணமாகாவிட்டால் அவருக்கு பதிலாக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகியவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புள்ளதாக கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.