Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் காண்ட்ராக்ட் முடிஞ்சிட்டு போய்ட்டு வரேன் மக்கா! – சிஎஸ்கேவுக்கு விடை கொடுத்த ஹர்பஜன்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (12:21 IST)
பிசிசிஐயின் ஐபிஎல் போட்டிகளுக்கான அணி தேர்வு பணிகள் நடந்து வரும் நிலையில் தான் சிஎஸ்கேவிலிருந்து வெளியேறியதாக ஹர்பஜன் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஹர்பஜன் சிங். சிஎஸ்கேவுடனான ஒப்பந்தத்தில் அவர் இருந்தாலும் கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக அணியில் புதிய வீரர்கள் பரிந்துரை, அணியிலிருந்து சில வீரர்களை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகளை அணி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த அணிக்காக விளையாடியது ஒரு அற்புத அனுபவம். அழகான நினைவுகளும், நல்ல நண்பர்களும் இந்த சில வருடங்களில் கிடைத்தன. சென்னை அணி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சிறப்பான இந்த இரண்டு ஆண்டுகளுக்காக நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments