Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

vinoth
வியாழன், 10 ஏப்ரல் 2025 (07:56 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.  82 ரன்கள் சேர்த்த சாய் சுதர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த அரைசதம் அகமதாபாத் மைதானத்தில் தொடர்ச்சியாக அவர் அடிக்கும் ஐந்தாவது அரைசதமாகும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 அரைசதங்களும், அதன் பின்னர் இந்த சீசனில் 3 அரைசதங்களும் என ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். பெங்களூரு அணி முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் இதே போல பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments