Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்கிட்டயே உன் வேலைய காட்றியா? – அர்ஸ்தீப் சிங்கை ஸ்டேடியத்தில் வெச்சு செஞ்ச ஜூரெல்!

Advertiesment
Arshdeep singh
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:32 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங்கின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை பஞ்சாப் அணி வென்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் அணி அளித்த 198 என்ற டார்கெட் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கடினமாகவே இருந்தது.

முதலிலேயே அஸ்வினை பேட்ஸ்மேனாக களமிறக்கி ராஜஸ்தான் விக்கெட்டை இழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆனாலும் சஞ்சு சாம்சன், ஹட்மயர், ஜூரெல் ஆகியவர்கள் சிறப்பாக ஆடி இலக்கை நோக்கி ரன்களை நகர்த்தினர்.

கிட்டத்தட்ட ராஜஸ்தான் இலக்கை நெருங்கியிருந்த சமயம் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பந்து வீச தொடங்கினார். ஆனால் அவரது வேக பந்துகளை தவிடுபொடியாக்கிய ஜுரெல் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயரவும் அர்ஸ்தீப் சிங்கிற்கு பதட்டம் ஏற்பட்டது.

ஜுரெலை ஏமாற்றும் விதமாக வேகப்பந்து வீசப்போவது போல வேகமாக ஓடி வந்து பிட்சுக்கு சில அடிகள் முன்னாள் வேகத்தை வேண்டுமென்றே குறைத்தார் அர்ஸ்தீப். அதை உடனடியாக கண்டுகொண்ட ஜுரெல் பேட்டிங் பிட்ச்சிலிருந்து விலகி சென்று நின்று அர்ஸ்தீப்பை முறைத்தார். தனது ஏமாற்று வேலையை ஜுரெல் கண்டுக் கொண்டதால் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் பந்து வீச சென்றார் அர்ஸ்தீப். வெற்றிக்காக அர்ஸ்தீப் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்தது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டிகளில் சஹால் படைத்த சாதனை!