Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னைக்கு விட்டா இனி சான்ஸே இல்ல! – Gujarat Titans vs SRH இன்று பலபரீட்ச்சை!

GT vs SRH
, திங்கள், 15 மே 2023 (17:15 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதும் நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவை எட்டி வரும் நிலையில் 16 புள்ளிகளை இலக்காக கொண்டு அனைத்து அணிகளும் முட்டி மோதி வருகின்றன. குஜராத் அணி 16 புள்ளிகளை அடைந்து விட்ட போதிலும் மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் கூடுதல் புள்ளிகளை பெறவும் உடனடியாக தகுதி சுற்றுக்கு செல்லவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

அதனால் இன்றைய போட்டி குஜராத்துக்கு முக்கியமான போட்டி. அதேசமயம் 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 போட்டிகளிலும் வென்றால், இதுவரை யாரும் 16 புள்ளிகளை தொடாமல் இருப்பதால் 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னேற வாய்ப்பாக இருக்கும். லீக் ஆட்டங்கள் முடிவில் 16 புள்ளிகளை 4 அணிகள் எட்டாத பட்சத்தில் இது கை கொடுக்கலாம் என்பதால் சன்ரைஸர்ஸ் அணிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் பலமாக உள்ள குஜராத் அணி சன்ரைசர்ஸை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும், இந்த லீக் போட்டியில் இரு அணிகளுமே மோதிக் கொள்ளும் முதல் போட்டி இது என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சமீப போட்டிகளில் அப்படிதான் எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்த போட்டி மாலை 7.30 மணியளவில் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி செய்த இமாலய தவறு: நிசப்தமான சேப்பாக்கம் மைதானம் - இடியாப்பச் சிக்கலில் சி.எஸ்.கே.