ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ள நிலையில் 3 அணிகள் ப்ளே ஆப் செல்லும் தகுதியை இழந்துள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த லீக் போட்டிகளில் இருந்து ப்ளே ஆப் போட்டிகளுக்கு புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெறும்.
ப்ளே ஆப் தகுதி பெற 16 புள்ளிகள் அவசியம் என்ற நிலையில் குஜராத் அணி 16 புள்ளிகளுடனும், சிஎஸ்கே 15 புள்ளிகளுடனும், மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடனும், லக்னோ அணி 13 புள்ளிகளுடனும் முதல் 4 இடங்களில் உள்ளன.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்த டெல்லி அணி ப்ளே ஆப் தகுதியிலிருந்து முற்றிலுமாக வெளியேறியது. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இனி மீதமுள்ள போட்டிகளில் வென்றாலும் 16 புள்ளிகள் பெற முடியாது என்பதால் அவையும் ப்ளே ஆப் தகுதியை இழந்துள்ளன.
புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் செல்ல ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ ஆகிய அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் இரண்டையுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆர்சிபி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால்தான் ப்ளே ஆப் தகுதி பெற முடியும்.
சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.