Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Greatest Of All Time.. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ஜாஸ்ப்ரிட் பும்ரா!

Prasanth Karthick
செவ்வாய், 28 ஜனவரி 2025 (18:16 IST)

இந்திய கிரிக்கெட் வீரர் ஜாஸ்ப்ரிட் பும்ரா 2024ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார். 

இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சில் தனக்கென தனித்தடம் பதித்தவர் ஜாஸ்ப்ரிட் பும்ரா. அசுர பாய்ச்சலாக ஓடி வந்து உடலை வளைத்து அவர் பந்து வீசும் விதம் கண்டு வியக்காதவர்களே இல்லை எனலாம். கடந்த சில காலமாக இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வந்தாலும், பும்ராவின் பந்து வீச்சாலெயே சமாளித்து வருகிறது.

 

கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கூட அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தில் பல சாதனைகளை படைத்தார் பும்ரா. சமீபத்தில் குஜராத்தில் நடந்த COLDPLAY இசை நிகழ்ச்சியில் கூட பும்ராவை அவர்கள் வாழ்த்தியது வைரலானது. 

 

இந்நிலையில் பும்ராவின் சாதனைக்கு மற்றொரு மகுடமாக 2024ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார் ஜாஸ்ப்ரிட் பும்ரா. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை. ஏற்கனவே 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதையும் பும்ரா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூப்பர் 6 சுற்றில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. த்ரிஷா சூப்பர் சதம்..!

தோனியைப் போல விளையாடுகிறார் திலக் வர்மா… பாராட்டிய முன்னாள் வீரர்!

இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

ஷமி எப்போது அணியில் இடம்பெறுவார்?… பயிற்சியாளர் சிதான்ஷு அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments