Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

vinoth
புதன், 22 ஜனவரி 2025 (14:12 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு முன்னதாக நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்த தோல்விகள் எல்லாம் இந்திய அணிக்குக் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடந்தவை. டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைப் பெற்று வருகிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு கம்பீரின் பயிற்சியாளர் பதவி மறுபரிசீலனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிசிசிஐ முன்னாள் தலைவருமான கங்குலி கம்பீருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ஒரு ஆலோசகராக 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதனால் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!

ரோஹித் ஷர்மாவுக்கு சிறப்பு சலுகை… ரஞ்சி போட்டிக்காக மைதானத்தில் கூடுதல் இருக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments