Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 2 April 2025
webdunia

“தயவு செய்து ஒருவரை மட்டும் ஹீரோவாக வழிபடாதீர்கள்…” கௌதம் கம்பீர் குற்றச்சாட்டு!

Advertiesment
கவுதம் கம்பீர்
, செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:52 IST)
ஒருவரை மட்டும் தூக்கிப் பிடித்து ஹீரோ வழிபாடு செய்யாதீர்கள் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

”நாம் ஹீரோக்களை உருவாக்க வேண்டாம். நாம் கிரிக்கெட்டைதான் ஹீரோவாக கருத வேண்டும். இந்த ஹீரோ பிம்பத்தில் உருவானவர்கள்தான் கபில்தேவ், சச்சின், தோனி இப்போது கோலி வரை. ஆப்கானிஸ்தான் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமாரைப் பற்றி யாருமே பேசவில்லை. கோலியின் சதம் பற்றிதான் அனைவரும் பேசினார்கள். இந்த நாயக வழிபாட்டு மன நிலையில் இருந்து வெளிவரவேண்டும்.” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா vs ஆஸ்திரேலியா… மொஹாலியில் இன்று முதல் டி 20 போட்டி!