Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய தொடர்: கங்குலி பேட்டி!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:55 IST)
ஐபிஎல் போட்டி தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது 
 
இந்த தொடரில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் விளையாட உள்ளதாகவும், டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கும் என்ற தொடர் ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்
 
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்த மாதம் பயணம் செய்ய உள்ளதாகவும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் வெளி நபர்களுக்கு அனுமதி இல்லை என்றும், வீரர்கள் அனைவரும் தனித்து இருக்க வலுவான ஏற்பாடுகளை செய்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார் 
 
மேலும் இந்திய அணியினர் தங்கள் குடும்பத்துடன் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments