Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கங்குலி

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (12:37 IST)
பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் அமீரகத்தில் கொரோனா காலத்திலும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனைகளில் அவரின் இதயத்துக்கு செல்லும் குழாய்களில் 3 அடைப்புகள் இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கங்குலியை நேரில் சென்று நலம் விசாரித்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடியும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நிலை சீரானதை அடுத்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments