Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே கே ஆர் அணி நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டது… கம்பீர் வருத்தம்!

கோலி
vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (08:29 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

இந்நிலையில் இப்போது தான் கேப்டனாக பங்காற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இப்போது அவர் அரசியல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என பாஜக தேசிய தலைவரிடம் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கம்பீர் “சென்னை, மும்பை போல இருந்த கொல்கத்தா அணி அதன் நட்சத்திர அந்தஸ்தை சில ஆண்டுகளாக இழந்துள்ளது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக திகழ வேண்டுமென்றால் களத்தில் நிரூபிப்பதுதான் ஒரே வழி. எங்கள் அணியை நேசிக்கும் ரசிகர்களுக்கு உண்மையாக அனைவரும் இருக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஸ்க்க நான் எடுக்குறேன்… நீங்க களத்துல இருந்தா போதும் – கோலியோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்!

திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் ஸ்மித்!

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!

ஐசிசி தலைவராக இருந்துகொண்டு ஜெய் ஷா இப்படி செய்யலாமா?... எழுந்த விமர்சனங்கள் !

கோபித்துக்கொண்ட கே எல் ராகுல்… ஆட்டம் முடிந்ததும் சமாதானப்படுத்திய கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments