Publish Date: Mon, 04 Mar 2024 (07:32 IST)
Updated Date: Mon, 04 Mar 2024 (07:41 IST)
சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்ட ஜார்கண்ட வீரர் ராபின் மின்ஸ் ஐபிஎல் தொடரில் நுழையும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் தோனியின் ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் ஆவார்.
குஜராத் அணியால் ரூ.3.6 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார் ராபின் மின்ஸ். ரூ.20 லட்சம் அடிப்படை விலை கொண்ட 21 வயதாகும் மின்ஸை எடுக்க, மும்பை குஜராத் இடையே கடும் போட்டி நிலவியது. இவரது தந்தை விமான நிலையத்தில் காவலாளியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் இப்போது ராபின் மின்ஸ் இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சிக்காக தன்னுடைய பைக்கில் சென்ற அவர் எதிரே வந்த மற்றொரு இருசக்கரவாகனத்தில் மோதியுள்ளார். அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு முழங்காலில் அடிபட்டுள்ளதால் அவர் இந்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.