Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளே வந்ததும் குழப்பத்தை ஆரம்பித்த கம்பீர்…. டி 20 அணிக்கு புதிய கேப்டன் யார்?

vinoth
வியாழன், 18 ஜூலை 2024 (07:52 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் தேர்வுக்குழுவினர் அனைவரும் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக கம்பீருக்கும், அஜித் அகார்கருக்கும் இடையே விவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவாதம் முடிவை எட்டாததால்தன இன்னும் இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கம்பீர் அணிக்குள் வந்த முதல் தொடரிலேயே கேப்டனை நியமிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments