Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (14:02 IST)
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி சமன் செய்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தபோது அதிர்ச்சி செய்தியாக அஸ்வின் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.  குறைந்த பட்சம் இந்த தொடரை முடித்துவிட்டாவது அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என ரசிகர்கள் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் அஸ்வின் குறித்து “ஒரு இளம் வீரராக தொடங்கி ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அடுத்த தலைமுறை பவுலர்கள் உங்களை பார்த்துதான் பவுலராக ஆனேன் என சொல்வார்கள். உங்கள் இன்மை எப்போதும் உணரப்படும்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments