Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (13:55 IST)
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் அஸ்வின் திடீரென தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவு இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒன்றாக அமைந்துள்ளது. குறைந்த பட்சம் இந்த தொடரை முடித்துவிட்டாவது அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என ரசிகர்கள் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி அஸ்வின் குறித்து “உங்களோடு 14 ஆண்டுகள் இணைந்து விளையாடியுள்ளேன். நீங்கள் ஓய்வைப் பற்றி என்னிடம் சொன்னபோது நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். இந்திய அணிக்காக நீங்கள் செய்த பங்கு அளப்பரியது. உங்கள் திறமைக்கு ஈடு இணையே இல்லை. நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்கள்… அப்ப நம்ம நிலைமை?

நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன்… ஆனால் அவர்கள் அற்புதம் செய்துவிட்டார்கள் – கே எல் ராகுல் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments