Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் – அதிகமாகும் அழுத்தம் !

உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் – அதிகமாகும் அழுத்தம் !
, புதன், 5 டிசம்பர் 2018 (08:00 IST)
கடந்த சில மாதங்களாக பார்மில் இல்லாத தோனி மீண்டும் பழைய ஆட்டத்திறனுக்கு வருவதற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

தோனி தேசிய அணிக்கு தேர்வானது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அன்றிலிருந்து இன்று வரை தோனி எப்போது அவு ஆஃப் பார்ம் எனக் காரணம் காட்டி அணியில் இருந்து ஓரங்கட்டப் படவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போது டி20 போட்டிகளிலும் ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்படு விட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அவருக்கு கடந்த அக்டோபர் மாத போட்டிகளுக்குப் பிறகு அடுத்தாண்டு ஜனவரியில்தான் மீண்டும் சர்வதேசப் போட்டி.
webdunia

மூன்று மாதகாலம் ஓய்வில் இருக்கும் தோனி இந்த காலத்தில் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி தனது ஃபார்மை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். முன்னாள் இந்தியக் கேப்டன் கவாஸ்கர் ‘தேசிய அணியில் இல்லையென்றால், உள்ளூர் போட்டிகளில் விளையாடமாட்டார்களா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

எப்படியும் அடுத்தாண்டு நடக்க இருக்கும் உலகக்கோப்பை ஆட்டத்தோடு ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படும் தோனி தனது அந்திமக் காலப் போடிகளில் சிறப்பாக விளையாண்டு தனது ரசிகர்களை முழுமையாகத் திருப்திபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒய்வு பெற்றார் உலகக்கோப்பை நாயகன்