Publish Date: Tue, 04 Dec 2018 (20:44 IST)
Updated Date: Tue, 04 Dec 2018 (20:45 IST)
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த தோனி, தனது கேப்டன் பதவியை உதறி தள்ளி, டெஸ்ட் போட்டிகளிகளும் விடைபெற்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அதுவும் சமீபத்தில் நடந்த போட்டியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால், அதிக நேரம் ஓய்வுடன் உள்ளார். இதே போல் தவான் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாததால், அவரும் ஓய்வில் உள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐக்கு கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் தோனி, தவான் ஆகியோர் ஏன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை? என்று நாம் ஏன் கேட்கக்கூடாது.
பிசிசிஐயிடம், சர்வதேச போட்டிகளில் அவர்கள் இடம்பெறாத நிலையில் உள்ளூர் தொடர்களை புறக்கணிக்க ஏன் அனுமதி கொடுத்தீர்கள் என்றுதான் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தோனி அக்டோபரில் இருந்து விளையாடவில்லை. ஜனவரியில்தான் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது. இதனால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.