Publish Date: Tue, 23 Mar 2021 (08:19 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (08:51 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்க உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் டி 20 தொடரையும் முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று புனேவில் முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறது. பகலிரவு போட்டியான இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.