Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

vinoth
சனி, 30 நவம்பர் 2024 (08:53 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. கர்நாடகாவில் ஆர் சி பி அணிக்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது. ஆனால் ஆர் சி பி அணி செய்த ஒரு செயலால் தற்போது அம்மாநில ரசிகர்களிடம் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

ஆர் சி பி இந்தி ரசிகர்களைக் கவரும் விதமாக இந்தியில் சமூகவலைதளக் கணக்குகளைத் தொடங்கியது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தற்போது இந்தி எதிர்ப்புக்கு எதிரானப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் ஆர் சி பி அணியின் இந்த செயல் ரசிகர்களைக் கோபமடையச் செயதுள்ளது.  மேலும் அம்மாநில கலாச்சார அமைச்சகம் இது சம்மந்தமாக விளக்கம் கேட்டு அணி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments