தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின். பல்வேறு முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்தார்.
இவர் சுமார் 140கிமீ., வேகத்தில் பந்துவீசி அதை ஸ்விங் செய்யும் திறமை படைத்தவர்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸ்டெயின்ஸ் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன இவர் இலங்கைக்கு எதிராக( 2019) தனது கடைசி டெஸ்ட்டில் விளயாடினார். டெஸ்டுகளில் 93 போட்டிகளில் விளையாடி 439 விக்வெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 26 முறை இவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை புரிந்திருக்கிறார்.
அதேபோல் 125 ஒருநாள் தொடரில் விளையாடி 196 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 47-டி-20 போட்டிகளில் விளையாடி 65 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.