Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற முன்னாள் நடுவர்!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (07:28 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார்.

இந்நிலையில் அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்தும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் தேர்வுக்குழு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒருவராக முன்னாள் நடுவரான அலிம் தாரும் இணைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர் 132 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 239 ஒருநாள் போட்டிகள் மற்றும் 69 டி 20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments