மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

Prasanth Karthick
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (15:48 IST)

ஐபிஎல் போட்டிகளில் இன்று சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ள உள்ள நிலையில் சிஎஸ்கே குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகளில் இன்று க்ரேட் ரிவால்ரி போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த சீசனில் முதலிலேயே மோதிக் கொண்ட இந்த இரு அணிகளில் சிஎஸ்கே அப்போது வென்றது. அந்த வெற்றிக்கு இன்று வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

 

இதற்கிடையே மும்பையில் தோனியின் ஆதிக்கம் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது முழுக்க முழுக்க அங்கே சிஎஸ்கே ரசிகர்கள்தான் இருப்பார்கள். மும்பை ரசிகர்களை பார்க்கவே முடியாது. அதேபோல வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடந்தாலும் கூட பாதிக்கு பாதி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்தான் இருக்கிறார்கள். மஹி பாய் (தோனி) சில சமயங்களில் மும்பை ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து சிஎஸ்கே ரசிகராக மாற்றிவிடுகிறார்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments