Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட் இழக்காமல் வெளுத்தெடுக்கும் பேட்ஸ்மேன்கள்… வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (16:15 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

அதன் பின்னர் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டே இழக்காமல் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

தற்போது வரை 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 37 பந்துகளில் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 38 ரன்களோடு விளையாடி வருகிறார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments