இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் அடித்து, ஆட்டமிழந்துள்ளார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா(27 ரன்கள் ), ராகுல் ( 5 ரன்கள் அவுட்டாகிவிடவே, அடுத்து வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதர் இணைந்து விளையாடினர், இதில், கோலி 40 பந்துகளுக்கு 50 ரன் கள் அடித்து அவுட்டானார்.
ஏற்கனவே, டி-20 உலகக் கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்களின் பட்டியலில், விராட் கோலி முதலிடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் அடித்த ரன்களுடன் சேர்த்து, டி-20 கிரிக்கெட் விராட் கோலி மொத்தம் 4000 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது ஹர்த்திக் பாண்டியா 53 ரன்களுடனும், ரிஷப் பாண்ட் 6 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Edited by Sinoj