Publish Date: Thu, 05 Aug 2021 (23:37 IST)
Updated Date: Thu, 05 Aug 2021 (23:44 IST)
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் அனில் கும்ளேவின் சாதனையை
சமன் செய்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்தது. பின்னர் உணவு இடைவேளைக்குப் பின் ஆண்டர்சன் அபாரமாக பந்து வீசினார். புஜாராவைத் தொடர்ந்து, விரட் கோலியின் விக்கெட்ட் வீழ்த்தினார் ஆண்டர்சன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 619 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் வரிசையில் இந்தியாவின் அனுல் கும்ளேவின் சாதனைச் சமன் செய்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் வரிசையில் முரளிதரன்(800). ஷென் வார்னே( 708) உள்ளனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன் மட்டும்தான் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sinoj
Publish Date: Thu, 05 Aug 2021 (23:37 IST)
Updated Date: Thu, 05 Aug 2021 (23:44 IST)