Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி 20 போட்டிகளில் பவுலர்கள் திணற இதுதான் காரணம்… சி எஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் கருத்து!

டி 20 போட்டிகளில் பவுலர்கள் திணற இதுதான் காரணம்… சி எஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் கருத்து!

vinoth

, புதன், 24 ஏப்ரல் 2024 (07:20 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இந்த புதிய விதிமுறையால் இப்போது ஐபிஎல் தொடரில் 220, 240 எல்லாம் வெகுசாதாரண ஸ்கோராகிவிட்டது. பவுலர்களால் ரன்களைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளங்களும் அமைக்கப்படுகின்றன. இதனால் பவுலர்கள் மத்தியில் இம்பேக்ட் ப்ளேயர் விதிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரரும், தற்போதைய சி எஸ்கே பயிற்சியாளருமான டுவெய்ன் ப்ராவோ இதுபற்றி மாற்றிக் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “பவுலர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்காததுதான் டி 20 போட்டிகளில் அவர்கள் திணற காரணமாக உள்ளது. யார்க்கர்களை சரியாக வீச முடியாததுதான் அவர்களின் பிரச்சனை. சென்னை அணியின் பவுலிங் பயிற்சியின் போது பவுலர்களை 15 யார்க்கர்கள் வரை வீச சொல்லி வருகின்றேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 உலகக் கோப்பையில் இவர்களதான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும்- கங்குலி ஆசை!