Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையின் இறுதியில் அஸ்வின் சரியாக விளையாட வில்லை – தினேஷ் கார்த்திக்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (10:04 IST)
2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோரின் அணித்தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த தொடர் முழுவதும் சஹாலுக்கு வாய்ப்பளிக்கப் படாதது கேள்விகளை எழுப்பின.

இந்நிலையில் இந்திய அணிக்காக டி 20 உலகக்கோப்பையில் சில போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் அதை குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் “அணியில் வீரர்கள் தேர்வு என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வீரர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை பொறுத்தது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் தொடரின் இறுதியில் சிறப்பாக விளையாடவில்லை.  அணியில் சஹால் இடம்பெற்றிருந்தால், அவர் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments