Publish Date: Thu, 10 Feb 2022 (17:33 IST)
Updated Date: Thu, 10 Feb 2022 (17:41 IST)
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தோனியை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியதால ரிச்சர்ட் மேட்லி கூறியுள்ளார்.
ஐபிஎல் ஏலம் என்றதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவர் ரிச்சர்ட் மேட்லி. பல வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை அறிமுகப்படுத்தி, ஏலத்தை சுவாரஸ்யமாக நடத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யுடியூப் பக்கத்தில் அவரை நேர்காணல் செய்தார்.
அப்போது ஐபிஎல் முதல் ஏலத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் மேட்லி. அதில் 2008 ஆம் ஆண்டு ஆக்ஷனில் தோனியை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடுமையான போட்டி நிலவியது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேதான் கடைசி வரை போட்டி நிலவியது. சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவைப்பட்டதால் அவர்கள் தோனியை 15 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு எடுத்தனர் எனக் கூறியுள்ளார்.